உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. (பக்கம்: 160.)
மொழிக்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் தேவநேயப் பாவாணர் செய்துள்ள தொண்டினை இந்த நூல் தொகுத்துத் தருகிறது. மரத்தின் கிளையின் வகைகளைத் தன்மைக்குத் தக்கவாறு தமிழ் மக்கள் எவ்வாறு கூறுகின்றனர் என்பதைப் பாவாணர் தெரிவித்துள்ளார். அச்சொற்களான கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு என்பனவற்றையும் மேலும் பல்வேறு சொல் தொகுதிகளையும் நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்தில் குலமுறை இருந்ததை ஏற்றுக்கொள்ளும் பாவாணர் ஜாதி முறை இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பதை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
சிறுதெய்வம், பெருந்தெய்வம், இறைவன் என்ற நிலைகளில், பாவாணர் சமயம் சார்ந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், மாயோன் பற்றியும், சோயோன் பற்றியும் பாவாணர் கூறியுள்ள கருத்துகளையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.