பாவை பப்ளிகேஷன்ஸ், 145, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014.(பக்கம்: 110.)
தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் கலந்து காணப்படுவது பாடல்கள். இந்தப் பாடல்களை ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் என்றும், ஏட்டில் எழுதப்படாத பாடல்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர். ஏட்டில் எழுதப்படாமல், பழங்காலம் முதலே பாடப்பட்டு வந்த பாடல்களை, நாட்டுப்புறப் பாடல்கள் என்கிறோம்.
நாட்டுப்புறப் பாடல்களில், சிறுவர் பாடல்களாகக் காணப்படுபவற்றைத் தொகுத்து, ஒரு சிறந்த ஆய்வுரையுடன் இந்த நூலில் தந்திருக்கிறார் ஆய்வாளர். நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களாக ஐநூறு பாடல்களைத் தொகுத்திருக்கும் ஆய்வாளரின் முயற்சி பாராட்டுக்குரியது.
இந்த ஐநூறு பாடல்களும் மதுரையைச் சார்ந்த பகுதிகளில் மட்டும் பாடப்படுபவையாம். பிற பகுதிகளில் உள்ள பாடல்களையும் தொகுத்தால், சிறுவர் பாடல்களின் தொகுதியே பெருந்தொகுதியாக இருக்கும்.