வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 120.)
சிரிக்க வராத தமிழர்களுக்குக்கூட வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக்கொடுத்த நகைச்சுவைப் பேராசிரியர், "தென்கச்சியார்' என்பது நாடறிந்த உண்மை. இதை மெய்ப்பிக்கும் அறிவு, ஆய்வுச் சுரங்கப் புதையலே இந்நூல்.
கிரேசிமோகன் அணிந்துரையால் இந்நூல் மேலும் பளிச்சிடுகிறது.
பதினாறு தலைப்புகளில், பதினாறு செல்வமென, நமக்கு அளித்தரும் கருத்துக் கருவூலம்.
நம் இரு கண்களாய் என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ராமாயணமும், மகாபாரதமும். அவைகள் தெரிவிக்கும் கருத்துகள் ஏராளம். தாராளம். ஆனால், சீதை சிரிப்பையும், திரவுபதி சிரிப்பையும் எடுத்துக்கொண்டு, அதன்மூலம் புதிய தகவல்களைத் தர முனைந்திருக்கும் தென்கச்சியாரை பாராட்டி மகிழலாம்.
உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் சேர்த்து ஒரு வைட்டமின் தேவைப்படுகிறது. அதன் பெயர் சிரிப்பு என அறிவித்து, நூலை நிறைவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
நிறைந்த இன்பம், நிரந்தர இன்பம் பெற்றிட நூலை வாங்கிப் படிக்கலாம்.