கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168.)
சில அறிஞர்களின் கட்டுரைகள் நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்வை உயிர்த்தும்; சில அறிஞர்களின் கட்டுரைகள் நம் அறிவை விரிவுபடுத்தும். அத்தகு வலிமை கட்டுரைகளுக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.
ஆசிரியரால் பல கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட 16 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது. பேச்சாற்றல் குறித்து விளக்கும் முதல் கட்டுரை முதல், இஸ்லாமியர் தமிழ் இலக்கியங்கள் கூறும் மனித நேயம் வரை அனைத்தும் கற்கண்டு போல் இனிக்கின்றன. கண்ணதாசன் கண்ட இஸ்லாம் என்ற கட்டுரை, கண்ணதாசன் குறித்து புதிய பார்வையை நம்முள் ஏற்படுத்துகிறது.
அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.