பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600 108. (பக்கம்: 352.)
சைவ சித்தாந்தக் கருத்துக்களை முழுவதுமாக அறிந்து கொள்வதற்கு வழிகாட்டியாய் அமைவது தமிழில் உள்ள மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு. அந்தப் பதினான்கையும் செய்யுளாகப் படித்து எல்லாராலும் எளிதில் பொருள் கொள்ள இயலாது. எனவே, அவற்றை உரைநடையில் வழங்கியுள்ளார் கா.சுப்பிரமணிய பிள்ளை. இந்த நூலின் மொழிநடை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்னும் உணர்வு தோன்றாத வகையில் எளிமையாக அமைந்திருப்பது இதன் சிறப்பு ஆகும். தமிழ்ச் செய்யுளில் பழக்கம் இல்லாதவர்களும் படித்து அறியும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் சைவ சமயத்தார்க்கு மீண்டும் கிடைத்திருப்பது நல்லருள் என்றே கூற வேண்டும்.