அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. ( பக்கம்: 176).
ஓவியக் கனவுகளில் திளைத்தபடி வியன்னா நகரில் நுழைந்த 18 வயது இளைஞனுக்கு சேரி வாழ்க்கையும் பிச்சை எடுக்கும் நிலையும் தான் விஞ்சியது. யூதர்களின் செல்வம் கொப்பளிக்கும் சிங்கார வாழ்க்கை அந்த இளைஞனின் இதயத்தை இரும்பு ஆணி கொண்டு அறைந்தது, யுத்தம் ஒன்று தான் நிகழ்காலத் துயரங்களுக்குத் தீர்வு காணும் பாதையை உருவாக்கும் என்று எண்ணி யுத்தம் வருமானால் படையில் சேர்ந்து விட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் தான் பின்னாளில் போலந்து, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சவாலாக விளங்கிய சர்வாதிகாரி ஹிட்லர்.கடந்த 1899ல், ஏப்ரல் 20ம் நாள் பிறந்து, 1945ல் ஏப்ரல் 30ம் நாள் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட, ஹிட்லர், மாவீரன் நெப்போலியனிடம் தீராத மதிப்பு கொண்டிருந்தார் என்பதையும் நூலாசிரியர் எடுத்தாண்டுள்ளார். ஹிட்லரின் இறுதி நாட்களை இரங்கத் தரும் வகையில் சிறப்பாகப் படைத்துள்ளார்.வரலாற்று நாயகர்களாக சித்தரிக்கும் வகையில், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் வகையில் ஆற்றொழுக்க நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. படித்துச் சுவைக்கலாம்.