சிறுவர்களுக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகாகவி பாரதி துவங்கி, தற்போதைய மாணவியின் படைப்புகள் வரை இடம் பெற்றுள்ளன. மகிழ்ச்சி மிக்க தருணங்களை தந்து அறிவூட்டும் வகையில் அமைந்துள்ளது. சிறுவர்களை பற்றிய கதைகளும் உள்ளன.
தொகுப்பில் 100 கதைகள் சிறுவர்களே எழுதியவையும், சிறுவர்கள் வாசிக்க உகந்த எளிய நடையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. படைப்புகள் அறநெறியை கடைப்பிடிப்பதை வலியுறுத்துகின்றன. மனிதன், விலங்குகள் கதாபாத்திரங்களாகி மனிதநேயத்தை வளர்க்கும் விதமாக பின்னப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு களஞ்சியமாகவும், ஆய்வாளருக்கு அரிய ஆவணமாகவும் உள்ளது. மகாகவி பாரதி, மூதறிஞர் ராஜாஜி என, சிறுவர் படைப்புகளை காலவரிசையில் தரும் நுால்.
– மதி