பல்துறைகளில் சாதனை படைத்து உள்ள பெண்கள் வாழ்வை ஓவியத்துடன் தரும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக 50 பேர் பற்றிய விபரங்கள் உள்ளன. தனித்திறனை காட்டுகின்றன. தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு துவங்கி, முக்கிய ஆளுமைகளின் ஓவியமும், வாழ்க்கை குறிப்பும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொருவருடைய வாழ்க்கை நிலை, சாதனைகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. முக ஓவியங்களும் தனித்துவத்துடன் மிளிர்கின்றன.
கடினமான சூழலை பெண்கள் கடந்து, சாதனை படைத்துள்ளதை எளிய நடையில் அறிய வைக்கிறது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பெண்களின் சிறப்பையும், ஓவியத்தின் அருமையையும் அறிய வைக்கும் அற்புத நுால்.
– ஒளி